விவசாயிகள் போராட்ட எதிரொலியா பாஜக தோல்வி?

தலைநகர் டெல்லியில், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி, 80 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். டெல்லி எல்லையில் மேலும் அதிக அளவில் விவசாயிகளை குவிக்க விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத், “ இரண்டு மாதங்களில் போராட்டம் முடிந்து விடும் என்று மட்டும் நினைக்காதீர்கள். அவசியம் ஏற்பட்டால், தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்துக்கு, டிராக்டர்களை கொண்டு செல்வோம். விவசாயிகளுக்கு பயிரிடவும் தெரியும் பயிர்களை எரிக்கவும் தெரியும். பயிர்களின் விலையை உயர்த்தாமல், பெட்ரோல் டீசல் விலையை மட்டும் உயர்த்திக் கொண்டு இருக்கின்றனர். மத்திய அரசு தொடர்ந்து நாட்டை சிதிலப்பாதைக்கு அழைத்துச் செல்கிறது. டெல்லியைத் தாண்டியும் போராட்டத்தை எடுத்துச் செல்வோம்” என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்த்து. இந்த தோல்வி குறித்து, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “ பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தோல்விக்கும் விவசாயப் போராட்டத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை” என்று கூறியுள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…