மாதவிடாய் விடுப்பு – ஜொமேட்டோ
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமேட்டோ, தன் ஊழியர்களில் பெண்களுக்கும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஜொமேட்டோவின் தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல், “வருடத்திற்கு 10 நாட்கள், பெண் ஊழியர்கள் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் மாதவிடாய் நேர சிரமங்களின் போது விடுமுறை எடுக்கலாம்.
அதற்கு ஆண் ஊழியர்களிடமிருந்து எந்த விதமான மோசமான எதிர்கருத்தோ, செயல்பாடுகளோ இருக்கக்கூடாது. அதையும் மீறி வார்த்தைகளால், செயல்களால் காயப்படுத்தினால், அதைக்குறித்து புகாரளிக்கலாம். இந்த விடுமுறையைச் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.