ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி, தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 70 நாளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் 11 கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் முடிவு கிடைக்கவில்லை.

வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறும் வரையில் ஓயப்போவதில்லை என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்நிலையில், போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல விவசாயிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் அழைப்பு விடுத்து இருந்தனர். இன்று, திட்டமிடப்பட்டபடி ரயில் மறியல் போராட்டம் நடந்தது. பீகார், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், கர்நாடகா, மகாரஷ்டிரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள சில ரயில் நிலையங்களிலும், ரயில் தண்டவாளங்களிலும் அமர்ந்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியின் திக்ரி பார்டர், பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா, பகதூர்கர் சிட்டி, மற்றும் பிரிகே ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.