உத்தர பிரதேசத்தில் தொடரும் சோகம்

உத்தர பிரதேச மாநிலம், உன்னாவில் பாலியல் பலாத்காரங்களும், வன்முறைகளும் அடிக்கடி நடைபெறும். கடந்த செப்.20ம் தேதி ஹதரஸில் தலித் பெண் ஒருவர் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மேலும் ஒரு சம்பவம் அதிர்ச்சியைத் தந்துள்ளது.3 சிறுமிகள் வாயில் நுரை தள்ள மயங்கி கிடந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்குச் கொண்டு சென்ற போது, அதில் இரண்டு சிறுமிகள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மூன்றாவது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
3 சிறுமிகளும் கால்நடைகளுக்காக புல் அறுக்கச் சென்றுள்ளனர். அவர்கள் விஷம் குடித்ததற்கான அறிகுறிகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்படும் என்று முதல் கட்ட விசாரணையில் காவல் துறையினர் கூறியுள்ளனர்.