‘திமுக வரலாற்றில் யாருக்கும் அஞ்சியதில்லை’ அமைச்சர் செஞ்சி மஸ்தான் 

திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய வரலாற்றில் யாருக்கும் அஞ்சி பயப்பட்டதாக காலமில்லை இது கொள்கைக்காக இருக்கிற இயக்கம் எல்லோருக்கும் எல்லாமே கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழக முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் தர்காக்கள் தேவாலயங்கள் ஆகியவற்றை சிறுபான்மை நலத்துறை சார்பில் பராமரிப்பதற்காக தர்காக்களுக்கு தலா ஆறு கோடியும், பள்ளிவாசல் பராமரிப்புக்கு 10 கோடியும் வழங்கி அந்த பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

2026 இல் நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும்,அன்றைக்கு வந்து கேட்டீர்கள் என்றால் பொருத்தமாக இருக்கும் காஞ்சிபுரத்தில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் 637 ஆண்டுகளுக்கு முன்பு சமாதி அடைந்து எல்லா மதத்தினராலும் போற்றப்பட்டு ஜிஆரத் எனும் தரிசனம் செய்ய வருவோருக்கு அனுதினமும் அருளாசி வழங்கும் ஹஜ்ரத் சையத் ஷா ஹமீது அவுலியா பாதுஷா சித்தி தர்கா என அழைக்கப்படும் பெரிய காஞ்சிபுரம் தர்காவில் திருச்ந்தன கூட உருஸ் உற்சவம் கடந்த 29ஆம் தேதி முதல் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

நான்காம் நாளான இன்று சந்தன குட உற்சவம் வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது. திருச்சந்தனகுட உருஸ் உற்சவத்தில் தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நல துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு மசூதியில் அமைந்துள்ள சமாதிக்கு மலர் போர்வை அணிவித்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார். சிறப்பு தொழுகைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,

தர்கா பள்ளிவாசல்கள் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,மக்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப்பணி பொறுப்பினை ஏற்றதிலிருந்து தமிழக முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் தர்காக்கள் தேவாலயங்கள் ஆகியவற்றை சிறுபான்மை நலத்துறை சார்பில் பராமரிப்பதற்காக தர்காக்களுக்கு தலா ஆறு கோடியும், பள்ளிவாசல் பராமரிப்புக்கு 10 கோடியும் வழங்கி அந்த பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த தர்காவினுடைய சந்தனக்கூடு உற்சவத்தில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மனிதநேயத்தோடு இதையெல்லாம் கடந்து சாதி மதம் இதையெல்லாம் கடந்து ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்று கூடி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறோம் 

நடிகர் விஜய் 2026 இல் அரசியலுக்கு வரட்டும்,அன்றைக்கு வந்து கேட்டீர்கள் என்றால் பொருத்தமாக இருக்கும், திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய வரலாற்றில் யாருக்கும் அஞ்சி பயப்பட்டதாக காலமில்லை இது கொள்கைக்காக இருக்கிற இயக்கம் எல்லோருக்கும் எல்லாமே கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது என்பது அதுவும் ஒரு எடுத்துக்காட்டு. 

இஸ்ரேலில் இருந்து இதுவரையில் 163 பேர் வந்திருக்கிறார்கள் அதில் 12 பேர் நேரடியாக வந்தவர்கள் மீதமுள்ளவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழி காட்டுதலோடு அவர்களை விமான கட்டணத்தோடு கொண்டு வந்து அவர்களை இல்லம் வரை அழைத்துச் சென்று பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது

மேலும் வருபவர்களுக்கு யாரேனும் அங்கிருந்து தகவல் கொடுத்தால் அழைத்து வருவோம் இது வரையில் தகவல் இல்லை பதிவு செய்தவர்கள் அத்தனை பேரையும் அழைத்து வந்திருக்கிறோம்.

தேவர் ஜெயந்தி விழாவில் நீங்கள் எல்லாம் நேரடியாக பார்த்து இருப்பீர்கள் மாண்புமிகு முதலமைச்சரும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அங்கே கலந்து கொண்டார்கள் அது அவர்களுடைய உட்கட்சி விவகாரம் என்பதை நாடே அறியும். என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *