சட்ட சபையின் இரண்டாம் நாள் கூட்டம்
தமிழகத்தில் திமுக தலைமையிலான புதிய ஆட்சி அமைந்ததில் இருந்து முதல் சட்டசபைக் கூட்டம் நேற்று (21.6.2021) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. ஆளுநர் உரையுடன் 16 ஆவது சட்ட சபைக் கூட்டம் தொடங்கியது.
ஆளுநர் உரையில் தமிழகத்திற்கான எதிர்காலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
இன்றைய கூட்டத்தில் மறைந்த எம்.எல்.ஏக்கள், எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நடிகர் விவேக், எழுத்தாளர் கி. ராஜ நாராயணன் மற்றும் காளியண்ணன் ஆகியோர் மறைவுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.