91 நாட்களுக்குப் பிறகு குறைந்த கொரோனா!
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் பாதிப்பு தீவிரமாக இருந்தது.
தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக இந்தியாவில் தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில்,
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,99,77,861
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 42,640
இதுவரை குணமடைந்தோர்: 2,89,26,038
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 81,839
கரோனா உயிரிழப்புகள்: 3,89,302
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1,167
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 6,62,521
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 28,87,66,201 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.