ஆட்டம் காட்டும் மழை… இன்றைய ஆட்டமும் ரத்தாகுமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனால், இந்தியா முதலில் பேட்டிங்க் செய்தது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். அதிகபட்சமாக நியூஸிலாந்து அணியின் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டைக் கைப்பற்றி இருந்தார்.

அதன்பின்னர்,களமிறங்கிய நியூசிலாந்து அணியினர் 101/2 என்ற நிலையில் இருந்தனர். போட்டியின் நான்காம் நாளான நேற்று(21.6.2021) மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக போட்டி ரத்தானது.

இதற்கு முன்னர், முதல் நாள் ஆட்டமும் மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், ஐந்தாவது நாளான இன்றைய ஆட்டமும் மழையால் ரத்தாகும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *