இந்தியாவை திணறடித்த ஜேமிசன்…5 விக்கெட் கைப்பற்றி அசத்தல்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனால், இந்தியா முதலில் பேட்டிங்க் செய்தது.
3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் என்ற நிலையில் நேற்று 3ஆம் நாள் ஆட்டத்தை இந்தியா தொடர்ந்தது.
போட்டி தொடங்கிய 3வது ஓவரிலேயே கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை இந்தியா இழந்தது. அவர் 44 ரன்கள் எடுத்திருந்தப்போது ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட துணை கேப்டன் ரஹேனா 49 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக, நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட்களையும், போல்ட், வேக்னர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி 101 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சம் இன்மை காரணமாக முன்னதாகவே ஆட்டம் நிறுத்தப்பட்டது.