சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உரை நிகழ்த்தும் மோடி!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் சர்வதேச யோகா தினம் நாளை ஜூன் 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், 7-வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
யோகா தின நிகழ்வுகள் அனைத்து தூர்தர்ஷன் சேனல்களிலும் காலை 6.30 மணி முதல் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்ற உள்ளார். அதோடு, மொராா்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் சாா்பில் நேரலையில் யோகா பயிற்சிகளும் செய்து காட்டப்பட உள்ளன. உடல்நலனுக்கு யோகா என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் கடைப்படிக்கப்படுகிறது என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.