ராகுல் காந்திக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி இன்று தனது 51 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சமூக வலைதளங்களிலும் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து, மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது ஆருயிர் இளவல் ராகுல் காந்தி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, எல்லா வகையிலும் சமத்துவமான இந்தியாவை நிறுவுவதற்காக அவர் ஆற்றிவரும் தன்னலங்கருதா – ஓய்விலாப் பணியைப் பாராட்டும் அனைவரோடும் இணைகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படைப் பண்புகளின்மேல் அவருக்குள்ள ஈடுபாடு மற்றவர்க்கு எடுத்துக்காட்டாக அமையத்தக்கதாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *