இனி டெலிவிரி பாய்களுக்கு வேலை இல்லை… ட்ரோன்கள் மூலம் உணவு டெலிவிரி
இந்தியாவில், ஆன்லைன் மூலம் உணவுகளை வீடுகளுக்குச் சென்று டெலிவிரி செய்வதில் ஸ்விக்கி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
மனிதர்கள் மூலம் உணவுகளைக் கொண்டு செல்லும் போது, சில சமயங்களில் தாமதம் ஏற்படுகிறது. இதனைத் தடுப்பதற்காக ட்ரோன்கள் மூலம் உணவினை டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகினது.
மேலும், ஸ்விக்கியின் ட்ரோன் டெலிவரிகான கூட்டாளி நிறுவனமான, அன்ரா டெக்னாலஜிஸ் (ANRA Technologies), பாதுகாப்பு அமைச்சகம் (MoD), விமான இயக்குநரகம் (DGCA) மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (MOCA) ஆகியவற்றிலிருந்து இறுதி அனுமதி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான சோதனைகள் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், அதன் பின்னர் அதிகாரப்பூர்வமாக ட்ரோன்கள் மூலம் உணவுகள் நம் வீடுகளுக்கே வந்து டெலிவிரி செய்யப்படும்.
இது குறித்து, ஸ்விக்கியின் முதன்மை திட்ட மேலாளர் ஷில்பா ஞானேஷ்வர் குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த திட்டத்தின் மூலம் நிறுவனம் “ட்ரோன் தொழில்நுட்பத்தின் நீண்ட தூரம் பயணிப்பது திறன்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறியுள்ளார்.