ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் இன்று ஆலோசனை

தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலை தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அதனைத் தடுப்பதற்காக மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு போடப்பட்டது.

அதன்படி, ஊரடங்கின் காரணமாகத் தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்ததையடுத்து, தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளுடன் ஜூன் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் திங்கள் கிழமை காலை 6 மணியுடன் இந்த ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இது குறித்து, தலைமைச்செயலகத்தில் மருத்துவநிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதில், தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், சிறு துணிக்கடைகளையும் உடற்பயிற்சி கூடங்களையும் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படவே வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *