உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலில் பேட் செய்யும் இந்திய அணி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18 முதல் தொடங்கியது.
இந்தப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. நேற்று செளதாம்ப்டனில் மழை காரணமாக போட்டி தொடங்கப்படாமல் ரத்தானது.
ஆனால், டெஸ்ட் போட்டிக்கான ஆட்ட நேரத்தில் ஒரு நாள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதால் மழையால் ஆட்ட முடிவில் பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று மழை இல்லாத்தால் ஆட்டம் சரியான நேரத்தில் தொடங்கியது. இன்று மொத்தம் 98 ஓவர்கள் வீசப்பட உள்ளன.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதனால், முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.