நீட் தேர்வுக்கு தயாராகுங்கள்…மருத்துவத் துறை அமைச்சர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இந்த நிமிடம் வரை நீட் நுழைவுத் தேர்வு இருப்பதாகவும், அதற்காக பயிற்சி எடுக்க வேண்டியது மாணவர்களின் கடமை எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு ரத்து செய்வதுதெரிவித்தார் குறித்து தமிழக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று, தமிழக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்த போது தமிழகம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன் வைத்தார்.

அதில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *