கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு.

ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (JCI) காலியாக உள்ள Accountant, இளநிலை உதவியாளர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (JCI)

மேலாண்மை : ஒன்றிய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 63

பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:

Accountant – 12

Junior Assistant – 11

Junior Inspector – 40

கல்வித் தகுதி :

Accountant – அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் M. Com, B. Com படித்திருக்க வேண்டும்.

Junior Assistant – அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Junior Inspector – அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :

Accountant – ரூ.28,600 முதல் ரூ.1,15,000 மாதம்

Junior Assistant – ரூ.21,500 முதல் ரூ.86,500 மாதம்

Junior Inspector – ரூ.21,500 முதல் ரூ.86,500 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://jci.onlineregistrationform.org/JCI/ எனும் இணையதளத்தின் மூலம் 13.01.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது, ஓபிசி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200

எஸ்.சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் கணினி வழியிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://jci.onlineregistrationform.org/JCI/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *