உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட முதல்வரின் தங்கை…அதிரடியாக கைது செய்த காவல்துறை!
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ் சர்மிளா தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் அரசை எதிர்த்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.தெலுங்கானாவில் 7 ஆண்டுகளாக எந்தவொரு வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை எனக் கூறி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த இளைஞரின் இறப்புக்கு நீதி கேட்டு ஒய்.எஸ் சர்மிளா நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.இதனையடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வாங்கிய அவர் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
என்னை கைது செய்து எங்கு வைத்தாலும் அங்கும் என்னுடைய இந்த உண்ணாவிரப் போராட்டம் தொடரும் என தெரிவித்த அவர் சந்திரசேகர ராவ் அரசு இளைஞர்களுக்கு எந்த ஒரு வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை என கடுமையாக சாடினார்.
தனது சகோதரர் ஆந்திராவில் முதல்வராக பதவி வகித்து வரும் நிலையில் அவரது தங்கை ஒய்.எஸ்.சர்மிளா தெலுங்கானாவில் அரசியல் கட்சித் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.