ஸ்டாலினுக்கு தொடர்ந்து குவியும் வாழ்த்துக்கள் … பிரபல நடிகர் நேரில் வாழ்த்து!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 
இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றார்.
பதவியேற்ற நாள் முதலே மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரம் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது அவருடைய மருமகனும் உடன் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதவியேற்ற நாள் முதலே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் தொடர்ந்து குவிகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *