முதல் நாளிலேயே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் புதிய முதல்வர்… புகழ்ந்து தள்ளும் மூத்த தலைவர்!

தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுள்ளார். தமிழக முதல்வராக பதவியேற்ற முதல்நாளே தனது தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி விட்டதாக திமுக வின் மூத்த தலைவர் மற்றும் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதியில் மக்களுக்கு 4000 ரூபாய் கொரோனா நிதியாக வழங்கப்படும் எனவும், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் மாநாகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்யலாம் எனவும் கூறியிருந்தார்.

இன்று தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு தலைமைச் செயலகத்துக் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கூறிய தேர்தல் வாக்குறுதிகளுக்கு தனது முதல் கையெழுத்தினை இட்டார். இதனையடுத்து அமைச்சரவையில் அனுபவமிக்கவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.திமுக பொதுச்செயலாளரும், நீர்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன், அமைச்சரவையில் அனுபவம் மிக்கவர்கள், இளைஞர்களுக்கு சமமாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார். கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முதல் நாளிலிருந்து நிறைவேற்ற ஆரம்பித்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுகவின் வளர்ச்சி நன்றாக இருக்கும். கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *