மலேசிய அமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து பல்வேறு தலைவர்களும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றர்.

தற்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு மலேசிய அமைச்சர் டடூக் சேரி எம்.சரவணன் தனது வாழ்த்தினைத் தெரிவித்து உள்ளார். அதில் அவர், தளபதியார் தலைமையில் திமுக மகத்தான வெற்றியை பெற்றுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும், மலேசிய தமிழ் மக்களின் சார்பாகவும் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *