20 ஆண்டுகளுக்குப் பிறகு மலர்ந்த தாமரை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று மே 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி 150 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. இதில் பாஜக வேட்பாளர்கள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். எம்.ஆர் காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் மற்றும் டாக்டர் சரஸ்வதி ஆகியோர் பாஜக சார்பில் வெற்றி பெற்றனர்.
கடைசியாக பாஜக 2001 ஆம் ஆண்டு சட்டப் பேரவைக்கு வேட்பாளரை அனுப்பியது. அதன் பின் 20 ஆண்டுகளுக்குப் பின் பாஜக மீண்டும் 4 வேட்பாளர்களை சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்கிறது. இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தாமரை மலர்ந்துள்ளது.
இது குறித்து பேசிய பாஜக தேசியத் தலைவர் எல்.முருகன் பாஜக கூறியது போலவே சட்டப் பேரவைக்கு 4 பேரை அனுப்பியிருக்கிறது என்றார். மேலும் பாஜக-வுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளார்.