நான்கடுக்குப் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்கள்!
தமிழகத்தில், ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. நாளை இந்த பணிகள் நடைபெற இருப்பதால் முன்னெச்சரிக்கையாக வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி ஆகிய மூன்று மையங்களில் நாளை எண்ணப்படுகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகள் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் எண்ணப்படவுள்ளன. இந்த வாக்கு எண்ணிக்கை மையத்துக்கான பாதுகாப்புக்காக 3000 காவல் துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அதே நேரத்தில், நாளை முழு ஊரடங்கு என்பதால் அதற்கான பாதுகாப்பு பணிகளில் 7000 காவல் துறையினர் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.