ஓ! இதெல்லாம் வாக்கு எண்ணும் போது எடுத்துக்கிட்டு போகக்கூடாதா…. இது தெரியாம போச்சே!
தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வருகிற மே 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுபவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் எந்தெந்த பொருட்களை எடுத்துச் செல்லலாம் எதனை எடுத்துச் செல்லக் கூடாது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன், கேமரா,பேனாக்கள், பாட்டில்கள், டிபன் பாக்ஸ், வேதிப்பொருட்கள், திண்பண்டம், தீக்குச்சிகள் கொண்டுவர தடை விதித்துள்ளது காவல்துறை. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் பாஸ் வைத்திருப்பவர்கள் தவிர வேறு யாரும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.