தேர்தல் ஆணையம் அதிரடி! வேளச்சேரியில் மறு வாக்குப்பதிவு

தமிழகத்தில், கடந்த 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை இரு சக்கரவாகனத்தில் சிலர் எடுத்துச் சென்றனர்.
இதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். முதலில், அது பயன்படுத்தப்படாத இயந்திரம் மற்றும் மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், இது, தேர்தல் நடத்தை விதி மீறல் என்பதால் வேளச்சேரி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனை ஏற்றுள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92 இல் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.