இது என்னடா அமைச்சருக்கு வந்த சோதனை! ராஜேந்திர பாலாஜிக்கு விபூதி அடித்த திமுக

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி தான் வெளியாக உள்ளது.

இந்நிலையில், தேர்தலில் போது நடந்த குளறுபடி குறித்து சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடைபெறுகையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குற்றமாகும். இது, தேர்தல் நடத்தை விதிமீறலின் கீழ் வருதால், முறைகேட்டில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

ஆனால், அதற்கும் நம்மூர் அரசியல்வாதிகள் ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். அது தான் டோக்கன் முறை. வாக்காளர்களுக்கு டோக்கனை மட்டும் கொடுத்து விட்டு, குறிப்பிட்ட கடைகளில் அதற்கான பொருட்களை பெற்றுக் கொள்ளச் செய்வர்.

இந்த டோக்கன் முறையிலும் ஊழல் நடந்து விட்டதாக ராஜபாளையம் ஆளுங்கட்சியனர் புலம்பி வருகிறார்களாம். அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜாபாளையம் தொகுதியில் போட்டியிட்டார். எப்படியாவது அங்கு வெற்றி பெற்று விட வேண்டும் என்று அமைச்சர் டோக்கன் முறையில் ஈடுபட்டிருந்தார்.

இதனை தெரிந்து கொண்ட திமுகவினர், அச்சுஅசல் அமைச்சரின் டோக்கனைப் போலவே பல டோக்கனை அச்சிட்டு தெருவில் வீசிச் சென்று விட்டார்களாம். இதனால், டோக்கனை வாங்கிக் கொண்டு பொருட்களை வழங்கும் கடை முதலாளி எது உண்மையான டோக்கன் என குழப்பிப் போய் இருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *