காங்கிரஸ் வேட்பாளருக்கு இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்!
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் இன்று நுரையீரல் தொற்றின் காரணமாக உயிரிழந்தார்.இதனையடுத்து,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இறந்த மாதவராவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் வரப்போகும் தருணத்தில் மாதவராவ் இறந்தது மிகுந்த வேதனை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.மேலும்,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.