தேர்தல் விதிமீறலால் மறு வாக்குப்பதிவு நடைபெறுமா?
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
ஆனால், வேளச்சேரியில் அதிகாரிகள் சிலர் வாக்குப்பதிவு இயந்திரங்களை தங்களது இரு சக்கர வாகனத்திலேயே எடுத்துச் சென்றனர். இது தேர்தல் நடத்தை விதிமீறல் என தேர்தல் ஆணையத்துக்கு புகாரளிக்கப்பட்டது.
முதலில் அது வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தாத இயந்திரங்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, “ வேளச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகியுள்ளன” என தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்குச்சாவடியில் 200 வாக்குகள் வரை இருந்த நிலையில் 15 வாக்குகள் மட்டும் பதிவாகி இருந்தது. 10 நிமிடங்கள் பயன்படுத்த பின்னர் இயந்திரம் பழுதாகியுள்ளது. இந்த விதி மீறல் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவுக் தெரிவித்துள்ளார்.