தமிழக தேர்தலில் ஆண்களை முந்திய பெண்கள்!
கடந்த 6ம் தேதி நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண்களே அதிகம் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2021ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக வாக்குச்செலுத்தி உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான புள்ளிவிவர பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
வாக்களித்தவர்களின் மொத்த எண்ணிக்கை – 4,57,76,311
ஆண் வாக்காளர்கள் -2,26,03,156
பெண் வாக்காளர்கள் – 2,31,71,736