ஓ.பி.எஸ் மகன் காரை தாக்கியது யார்? அமமுக நிர்வாகி கைது

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி சுமூகமாக நடந்து முடிந்தது. சில இடங்களில் லேசான வன்முறையும் நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் வாக்களித்து விட்டு அங்கிருந்த வாக்குச்சாவடியை பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

பெருமாள் கவுண்டர் பட்டியில் அவர் வாகனம் நின்று கொண்டிருந்த போது, சில மர்ம நபர்கள் அவரது காரில் கல் வீசி தாக்குதல் நடத்தினர். அவருடன் வந்திருந்த இன்னொரு காரும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது.

இதனையடுத்து, தனது காரை தாக்கியவர்கள் திமுக கட்சித் துண்டை அணிந்திருந்தனர். எனவே, திமுகவினர் தான் தங்களது காரை தாக்கினர் என ரவீந்திரநாத் குமார் தெரிவித்திருந்தார்.

அந்த தொகுதியில் போட்டியிடும் தங்கத் தமிழ் செல்வன் இந்த தாக்குதலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்திருந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக தற்போது, அமமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *