பாஜக கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு திரிணாமுல் காங்கிரஸிற்கு வாக்களியுங்கள்

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.மூன்று கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் நான்காம் கட்ட தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக பேசியுள்ளார்.பாஜக கொடுக்கும் பணத்தை வாங்கிகொண்டு திரிணாமுலுக்கு வாக்களியுங்கள் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் வங்கத்தின் மகளான மம்தா பானர்ஜியை வெற்றிபெற செய்யுங்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *