வாக்கு எந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு -காவல் ஆணையர்

 தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நிறைவடைந்தது.இதனையடுத்து அனைத்து மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும் சென்னையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக மின்னணு எந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்படும் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் 4 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் எனவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *