தூத்துக்குடியில் சமையல் செய்து நூதனப் போராட்டம்

நேற்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றன.ஆனால்,தூத்துக்குடியில் ராஜீவ் நகர் மக்கள் தேர்தலை புறக்கணித்து சமையல் செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடுகளுக்கு 20 வருடமாக பட்டா வழங்க மறுத்து வருவதை கண்டித்து தூத்துக்குடி ராஜீவ்நகர் பகுதி பொதுமக்கள் நேற்று தேர்தலை புறக்கணிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாலையில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து வாக்களித்தனர்.  
 தூத்துக்குடி ராஜீவ்நகர் 1-வது தெரு முதல் 10-வது தெரு வரையிலும் பாக்கியலெட்சுமி நகர் பகுதியிலும் சுமார் 250 வீடுகள் உள்ளன.

ஆனால், இந்த இடங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமானது எனக்கூறி பட்டா வழங்காமல் கடந்த 20 ஆண்டுகளாக இழுபறியில் உள்ளது. இங்குள்ள குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இந்த தீர்ப்பிற்கு பின்னரும்  பட்டா வழங்க மறுத்து வருகின்றனர் என்றும் இது குறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறியும் அங்குள்ள குடியிருப்பினர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் யாரும் வாக்களிக்காமல் அந்த பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ஒன்று திரண்டு அமர்ந்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இந்த போராட்டத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மாலை வரை நீடித்தது.

அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிகாரிகள் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சு வார்த்தை நடத்தினர்.அதன் பின்னர் அந்த பகுதி மக்கள் மாலையில் வாக்கு செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *