வாக்குப்பதிவு 3 மணி நிலவரம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

மக்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மூன்று மணி நிலவரப்படி  தமிழகத்தில் 53.35 சதவித வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

மேலும், அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 59.73 சதவீதமும், குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 41.58 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், சென்னையில் 48.49 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *