திமுக தான் அறுதித் பெரும்பான்மை பெறும் – திருமா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பல அரசியல் தலைவர்களும் தங்களது சொந்த தொகுதிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த அங்கனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.
அதன் பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இந்த தேர்தலில் திமுக தான் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்” என தெரிவித்திருந்தார்.