பூத் ஸ்லிப்புடன் பண விநியோகம் செய்த திமுகவினர் கைது
தமிழக சட்டமன்றத் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசி நேர பணப்பட்டுவாடாவைத் தடுக்க பறக்கும் படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட கணபதி மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் வெள்ளியங்கிரி, ரவி பாலு ஆகிய திமுக பிரமுகர்கள், பூத் ஸ்லிப்புடன் பணப்பட்டுவாடா செய்து வந்தனர்.
இதனைப் பார்த்து, பொது மக்களே அவர்களை போலீசில் பிடித்துக் கொடுத்தனர். போலீஸாரைப் பார்த்ததும் இருவரும் ரூபாய் நோட்டுகளைக் கீழே போட்டு விட்டு தப்ப முன்றனர். அவர்களைப் பிடித்து அவர்களிடம் இருந்த 73 ஆயிரத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.