கொரோனா பாதித்தவர்களின் உரிமை பறிக்கப்படாது – சுனில் அரோரா

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேராளா ஆகிய மாநிலங்களுக்கு இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, “

தமிழகத்தில் 6 கோடியே 28 லட்சம் வாக்காளர்களும், அசாமில் 2 கோடியே 32 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர். இதேபோல், மேற்கு வங்கத்தில் 7 கோடியே 34 லட்சம் வாக்காளர்களும், கேரளாவில் 2 கோடியே 67 லட்சம் வாக்காளர்களும், புதுச்சேரியில் ஒரு கோடி வாக்காளர்களும் இருக்கின்றனர்.

5 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 18 கோடியே 7 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வாக்குரிமைகள் பறிக்கப்படாது, அவர்கள் வாக்களிக்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *