கோவையில் பாஜகவினர் டோக்கன் வழங்கியதால் பரபரப்பு
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கடைசி நேர பணப்பட்டுவாடாவைத் தவிர்க்க பறக்கும் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நாளான இன்று காலை, கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசனின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி வந்தனர். அப்போது, அவர்களை காங்கிரஸ் கட்சியினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இது குறித்து காவல் துறையிலும் புகாரளிக்கப்பட்டது. ஆனால், காவல் துறையினர் அவர்களை தப்பிக்க விட்டதாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.