வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் எப்படி வாக்களிப்பது?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை அவசியம். ஆனால், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் எப்படி வாக்களிப்பது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கீழ்கண்ட 11 ஆவணங்களைக் கொண்டு வாக்களித்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டை

ஓட்டுனர் உரிமம்

பான்காட்டு

பாஸ்போர்ட்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு அடையாள அட்டை

வங்கி மற்றும் தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம்

மக்கள் தொகை பதிவேடால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்ட் (Smart card issued by RGI under NPR)

புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணம்

தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்ட்

எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டைகள்.

இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு வாக்காளர் அடையாள அட்டை இல்லாமலும் வாக்களித்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *