அப்பாவுக்காக வாக்குக்கேட்டு சென்ற ஜெயப்ரதீப்… திமுகவுக்கு வாக்களிக்கும்படி கோரிக்கை!
தேனியில் தனது அப்பாவுக்கு ஆதரவாக வாக்குக்கேட்டு சென்ற இடத்தில் திமுகவுக்கு ஓட்டு போடும்படி அவரிடம் அங்குள்ளவர்கள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி தொகுதியில் மூன்றாவது முறையாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அவரது மகன்கள் மற்றும் மருமகள்கள் அந்த தொகுதி மக்களிடம் நேரில் சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று போடி வஞ்சி ஓடை அருகில் உள்ள பாண்டிய மறவர் சங்கத்திற்கு, நேற்று காலை ஓபிஎஸ்சின் இளையமகன் ஜெயபிரதீப் வாக்கு சேகரிக்க சென்றார். அவரை வரவேற்று அமர வைத்தனர். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கேட்டவரிடம், நீங்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை சிறிதும் எதிர்பார்க்காத ஜெயபிரதீப், உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.