திமுக மீது நடத்தப்படும் ஐ.டி ரெய்டு பாஜக-வின் பழிவாங்கும் செயல் – டி.ஆர் பாலு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இதனையடுத்து,பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது,திமுக பொருளாளர் டி.ஆர் பாலு தனது கண்டத்தை தெரிவித்துள்ளார்.ஸ்டாலின் மகள், திமுக வேட்பாளர் வீடுகளில் ரெய்டு நடத்துவது பாஜக அரசின் பழிவாங்கும் செயல் எனஅவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் ஆதாயமடைய விதிகளை மீறி பாஜக-வால் வருமானவரித்துறை பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த விதிமீறலை தேர்தல் ஆணையம் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இந்த ரெய்டுக்கு திமுக-வின் கடைக்கோடி தொண்டனும் அஞ்சமாட்டேன், அடிபணியவும் மாட்டான் எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *