நான் வன்முறையை விரும்பாதவன் – செந்தில் பாலாஜி
தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பு அடைந்து வருகிறது.தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்களின் விமர்சனங்களும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
சில நாட்களாக வேட்பாளர்களின் விமர்சனங்கள் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் அளவிற்கு மாறி வருகிறது.தற்போது,பாஜக வேட்பாளர் அண்ணாமலை கரூர் வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டும் விதமாக பேசியுள்ளார்.அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக திமுக எம்.பி.கனிமொழியும் பேசினார்.
இந்நிலையில்,கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தான் அமைதியை விரும்புவன் என்றும் வன்முறையை விரும்பாதவன், கடின சொல் பேசாதவன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசி வருகிறார் என செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.