கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க -அ.தி.மு.க கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும் என பேசினார்.
மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீனவர்களுக்கான வளர்ச்சி பணிகளுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது . இலங்கை சிறையில் தற்போது எந்த தமிழக மீனவர்களும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளுக்காக அதிக கடன் ,சிறந்த சந்தை வாய்ப்புகளை எற்படுத்தி தருகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
சிறு,குறு தொழில்களுக்கும் மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது எனவும்அவர் தெரிவித்தார்.