அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு
தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் தற்போது அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்கு சேகரிப்பின் போது வாக்காளர்களுக்கு தலா ரூ.100 கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் சி.வி.சண்முகம் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தமிழகத்தின் பல தொகுதிகளிலும் இதேபோல் தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.