நந்திகிராமில் விதிமீறல்,நீதிமன்றத்தை நாடுவோம் – மம்தா ஆவேசம்

மேற்கு வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.இதில்,மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் உட்பட 30 தொகுதிகளுக்கு இன்று வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது.பதற்றம் நிறைந்த தொகுதியாக கருதப்படும் நந்திகிராமில் ஏற்கனவே 144 தடை உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.

நந்திகிராமில் போட்டியிடும் மம்தா பானர்ஜி தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.மேலும்,இந்த முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடும் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.இதனையடுத்து,மம்தா பானர்ஜி இந்த முறைகேடுகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

நந்திகிராமில் மம்தாவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி சென்ற சுவேந்து அதிகாரி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *