தோல்வி பயத்தால் பல்வேறு கட்சிகளை உதவிக்கு அழைக்கும் மம்தா – மோடி குற்றச்சாட்டு

மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.இதில் மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் முதல் கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில்,முதல் கட்ட தேர்தல் நிறைவடைந்து இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டாம் கட்ட தேர்தல் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதிக்கும் நடைபெறுவதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.நேற்று மம்தா பானர்ஜி பல்வேறு கட்சியினருக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் அனைத்து கட்சியினரும் பாஜக-விற்கு எதிராக கூட்டணி அமைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று பிரதமர் மோடி, மம்தா பானர்ஜியின் இந்த கடிதம் குறித்து விமர்சித்துள்ளார்.அதில் அவர் மம்தா பானர்ஜி தோல்வி பயத்தால் அனைவரையும் உதவிக்கு அழைத்து வருகிறார்.தனக்கு உதவி செய்வதற்காக வெளியாட்களை துணைக்கு அழைக்கிறார் மம்தா பானர்ஜி எனவும் கூறினார். மம்தா என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் ஆனால் மக்கள் நம்பிக்கையை விமர்சிக்க விடமாட்டேன் எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *