தொடர்ந்து பணப்பட்டுவாடா புகாரில் சிக்கும் அதிமுகவினர்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்படுகிறது. அவ்வாறு பின்பற்றப்படாத கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்கிறது என தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வருகிறது. பணப்பட்டுவாடா செய்பவர்கள் குறித்து ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆலங்குளம் தொகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்யும் போது, கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர்.