தேர்தல் பரப்புரைக்காக மீண்டும் தமிழகம் வரும் மோடி
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ல் நடைபெற உள்ளது.இதனையடுத்து அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.தமிழக தலைவர்கள் மட்டுமல்லாது தேசிய தலைவர்களும் தமிழகம் நோக்கி படையெடுக்கத் தொடங்கியள்ளனர்.
இந்த வரிசையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இருமுறைக்கு மேல் தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகை புரிந்துள்ளார்.தற்போது அவர் தேர்தல் பரப்புரைக்காக இன்று மீண்டும் தமிழகம் வருகை புரிய இருக்கிறார்.
இன்று இரவு தமிழகத்திற்கு வருகைதரும் பிரதமர் மோடி நாளை மதுரை மற்றும் கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.