சுவேந்து அதிகாரி மீது தாக்குதல்,மேற்கு வங்கத்தில் பரபரப்பு

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,நந்திகிராமில் மம்தா பானர்ஜியை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

பதற்றம் நிறைந்த சூழலாக கருதப்படும் நந்திகிராமில் தேர்தல் ஆணையம் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்நிலையில் சுவேந்து அதிகாரி மீது தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதல் குறித்து பேசிய அவர் தன் மீது பாகிஸ்தானியர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால் மேற்கு வங்கத்தில் மேலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *