விவசாயத்தின் மீது விவசாயிகளுக்கு விரக்தி ஏற்பட்டுள்ளது – ப.சிதம்பரம்
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் செல்வபெருந்தகையை ஆதரித்து குன்றத்தூரில் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.அப்போது பேசிய அவர்,விவசாயத்தின் மீது விவசாயிகள் விரக்தி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.கடந்த 3 மாதங்களில் முதல்வர் அடிக்கல் நாட்டிய கற்களை எல்லாம் எடுத்தால் ஒரு கட்டிடமே கட்டிவிடலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும்,முதல்வர் பதவி ஒரு காலத்தில் ஓமந்தூர் ராமாசாமி,ராஜாஜி,காமராஜர்,கருணாநிதி போன்ற திறமையான தலைவர்களால் அலங்கரிக்கப்பட்டது.ஆனால்,தற்போது மத்திய அரசுக்கு பயந்து செயல்படும் ஒருவர் முதல்வராக இருக்கிறார் எனவும் விமர்சனம் செய்தார்.