சேலத்தில் தொடங்கியது தபால் வாக்குப்பதிவு

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 80 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கும், வாக்களிக்க முடியாதவர்களுக்காகவும் தபால் வாக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி, சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று காலை முதல் தபால் ஓட்டுப் போடத் தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். சேலம் தெற்கு தொகுதியில் மட்டும் 80 வயதுக்கு மேற்பட்ட 675 மூத்த குடிமக்கள் மற்றும் 112 மாற்றுத் திறனாளிகள் என 787 பேர் தபால் ஓட்டுப் போட விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இவர்களுக்கு இன்று தபால் வாக்கு தொடங்கியது. இவர்களிடம் தபால் வாக்கு பெற 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், முதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலத்தில் தபால் வாக்குப் பதிவு நாளையும் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *